வேகமாக பரவும் கொலைகார சீன கொரோனா வைரஸ்: 6 பேர் பலி, 300 பேர் பாதிப்பு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

உயிர்க்கொல்லிக் கிருமியான சீன கொரோனா வைரஸ் ஆறு பேரை பலிகொண்டுவிட்டதாக சீனா அறிவித்துள்ளது.

சார்ஸ் போன்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 300ஐ தொட்டுவிட்டதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது.

இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது என்பதும் நேற்று உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இதுவரை மருத்துவமனைகளில் பணியாற்றும் 15 பணியாளர்களுக்கு, இந்த சுவாச வழி தொற்றும் நோய்க்கிருமி தொற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சீனா தவிர்த்து, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலும் இந்நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

இன்று இந்நோய்த்தொற்றால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆறாகியுள்ளது.

முதன்முதலாக, சுமார் 50 வயதுடைய ஒரு பெண்ணுக்கு இந்நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும், இதற்கு முன் இப்படி ஒரு வைரஸ் இருப்பதாக தெரியவில்லை என்றும், அவர் இப்போது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சீன உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மொத்தம் 303 பேருக்கு இந்நோய்த்தொற்று பாதித்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 54 பேருக்கு இந்நோய் இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும், 900 பேர் மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...