விமானத்தில் வந்த பயணியின் பார்சலை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்! என்ன இருந்தது தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தமிழகத்தில் விமானநிலையம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, 27 உயிரினங்களை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

சென்னை விமானநிலையத்தில் எப்போதும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவர். அப்படி இருக்கையில் வெளிநாட்டில் இருந்து சென்னைக்‍கு விமானம் மூலம் உயிரினங்கள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததால், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன் படி தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது

சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அதிகாரிகள் அவர்களின் பார்சலை திறந்து பார்த்த போது, உள்ளே இருந்த உயிரினங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பார்சலின் உள்ளே, தாய்லாந்து குரங்கு, அணில், ஓணான், பல்லி உள்ளிட்ட 27 உயிரினங்களை கூடையில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுரேஷையும் உயிரினங்களை வாங்க வந்த மேலும் இருவரையும் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட உயிரினங்கள் மூலம் நோய் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளதால் அதனை விமானம் மூலம் அதிகாரிகள் தாய்லாந்துக்கே அனுப்பி வைத்தனர். உயிரினங்களை கடத்தி வந்தது தொடர்பாக சுரேஷ் உள்ளிட்ட 2 பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers