அடுத்தது நீங்கள் தான்! ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை: வேல் பாய்ச்சிய ஈரான்

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய 3 ஐரோப்பிய நாடுகள், ஜேசிபிஓஏ என்றழைக்கப்படும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரச்சினை தீர்க்கும் வழிமுறையை சமீபத்தில் செயல்படுத்தினர்.

அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் மூன்றும் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுவிஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய சுங்க வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஸரீப் ட்விட்டர் பதிவிட்டதாவது, சொல்வதற்கு மன்னிக்கவும் நான் உங்களிடம் சொன்னேன்.

கடந்த வாரம் டிரம்ப் வரி விதிப்பை தவிர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் மூன்றும் ஜேசிபிஓஏ-வின் மீதி உரிமைகளை விற்றபோது, அது அவரது பசியைத் தூண்டும் என்று நான் எச்சரித்தேன்.

அவர்களின் ஒருமைப்பாட்டை விற்ற பிறகு எந்தவொரு தார்மீக-சட்டபூர்வமான உரிமைகளையும் இழந்த நிலையில், தற்போது மற்றொரு வரி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது..

ஐரோப்பிய ஒன்றியம் அதன் இறையாண்மையை செயல்படுத்த சிறப்பாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்