உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய வியாதி: வெளிநாட்டில் 30 இந்திய நர்சுகள் தீவிர கண்காணிப்பில்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
#S

சீனாவில் வுஹான் நகரத்தில் இருந்து பரவி வரும் கொடிய கொரோனா வியாதிக்கு சவுதி அரேபியாவில் இந்திய செவிலியர் ஒருவர் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வியாதி தொடர்பில், மேலும் 30 செவிலியர்கள் தீவிர கண்காணிப்புலும் மருத்துவ சோதனையிலும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான், பீஜிங் நகரங்களில் பரவி வரும் கொடிய ‘கொரோனா’ வைரசால் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தாய்லாந்து நாட்டுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது.

இந்த வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதருக்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த வைரஸ் குறித்து ஆராய்ந்து வரும் சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் உலக நாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விமான நிலையத்திலேயே சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனிடையே சவுதி அரேபியாவில் செவிலியராக பணியாற்றும் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வியாதி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவருக்கு, விசேட அறையில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, அவருடன் பணியாற்றும் மேலும் 30 செவிலியர்களுக்கும் நோய் பாதிப்பு உள்ளனவா என்பது தொடர்பில் மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்