விமான நிலையத்தில் 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கென்யாவில் தான் நிறைமாத கர்ப்பமாக இருந்த போது தன்னை சிலர் கடத்தி சென்று கருக்கலைப்பு செய்துவிட்டதாக பெண் கூறிய நிலையில் அவரின் போலியான நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Mombasa நகரை சேர்ந்தவர் சைதா பராக்கா (20). இவர் கணவர் முகமது அப்துல்லாமான்.

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி சைதா வீட்டிலிருந்து மாயமானார்.

பின்னர் சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் கணவருடன் சேர்ந்து பொலிசில் ஒரு புகாரை கொடுத்தார்.

அதில், நான் 8 மாதம் கர்ப்பமாக இருந்த போது Malindi சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் கிளம்பவிருந்தேன்.

அப்போது மூன்று பெண்கள் என்னை கடத்தி கொண்டு எங்கேயோ அழைத்து சென்றனர்.

பின்னர் எனக்கு கருக்கலைப்பு செய்து என் குழந்தையை என் கண் எதிரில் கொன்றார்கள்.

அதன் பிறகு நான் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன் என கூறினார். ஆனால் பொலிசாருக்கு சைதா மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது சைதா கர்ப்பமாகவே இல்லை எனவும், அவர் கூறியது அனைத்தும் பொய் எனவும் தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் சைதாவையும் அவர் கணவரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மீதான அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்