குவைத்தில் மனைவிக்கு தலைவாரிய கணவன்... தம்பதி கைது: காரணம் என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

குவைத்தில் மனைவிக்கு கணவன் தலைவாறும் வீடியோ ஒன்றை வெளியிட்டதற்காக தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ, நாட்டின் பொது இட நாகரீக விதிகளை மீறியதாக அந்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோ பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் உள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில், திருமணமான அந்த தம்பதியரில், மனைவிக்கு கணவன் தலை வாரி விடுகிறார்.

அப்போது, அந்த பெண், திரும்பி, வீடியோவுக்கு தனது பின் பக்கத்தைக் காட்டுகிறார். அத்துடன் அந்த பெண் அரபி மொழியில் ஏதோ ஆபாசமாக கமெண்ட் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையில் இன்னொரு முக்கிய விடயமும் உள்ளது. அதாவது இந்த குறிப்பிட்ட தம்பதியர் Bidoon என்னும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

சுமார் 100,000 Bidoon இனத்தவர்கள் குவைத்தில் வாழ்ந்துவந்தாலும், அவர்களுக்கு குவைத் அரசு குடியுரிமை அளிக்க மறுத்துள்ளது.

அவர்கள் அனைவரும் நாடற்றவர்களாகத்தான் குவைத்தில் வாழ்ந்துவருகிறார்கள் என்பதுடன், அவர்கள் சட்ட விரோதமாக வாழ்பவர்களாக கருதப்படுவதோடு, அவர்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்