நள்ளிரவில் இருட்டான அறையில் மிரட்சியுடன் உட்கார்ந்திருந்த பெண்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் பெண்ணிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் லொட்டரி சீட்டை திருடி சென்ற மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.

Phuket நகரில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் ஊழியராக பணிபுரிபவர் Pornthip Chanchaksu (47). இந்த பெண் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 11.30 மணிக்கு அங்குள்ள பொருட்கள் சேகரிக்கும் அறைக்குள் சென்றார்.

அறை இருட்டாக இருந்த நிலையில் அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் Chanchaksu-ஐ தூணில் கட்டி வைத்து வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர்.

பின்னர் அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பையில் இருந்த லொட்டரி சீட்டுகளை திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து பொலிசார் வந்த நிலையில் மிகவும் பயத்துடனும், மிரட்சியுடனும் இருந்த Chanchaksuவிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் நடந்த அனைத்தையும் அவர் பீதியுடன் தெரிவித்தார்.

Photo: Phuket City Police

Chanchaksu வைத்திருந்த லொட்டரி சீட்டுக்கு லட்சக்கணக்கில் பரிசு விழுந்ததாக கூறப்படும் நிலையில் பொலிசார் இன்னும் அதை உறுதி செய்யவில்லை.

திருடர்களின் முகத்தை இருட்டில் தன்னால் பார்க்க முடியவில்லை என Chanchaksu பொலிசில் கூறினார்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்து திருடர்கள் குறித்த தகவலை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.

Photo: Phuket City Police

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்