உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் தெரியுமா? முதன் முறையாக வெளியான படம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
#S

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மற்ற நாடுகளுக்கு பரவி வருகிறது.

வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில் நோயை எதிர்த்துப் போராடுவதற்காக சீனா அவசர அறிவியல் ஆராய்ச்சி குழுவைத் தொடங்கியுள்ளது.

சீன பொறியியல் அகாடமியின் உறுப்பினரும், 2003ல் சார்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான டாக்டர் ஜாங் நன்ஷான் ஆராய்ச்சி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சீன வல்லுநர்கள் கண்டுபிடித்த கொரோனா வைரஸின் எலக்ட்ரான் நுண்ணிய படங்களையும், தகவல்களையும் சீன நோய் தடுப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்