உரிமையாளரை அச்சுறுத்திய பாம்பு... மின்னல் வேகத்தில் வந்து வானத்தில் பறக்கவிட்ட பாசக்கார நாய்: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் உரிமையாளரை வழிமறித்த பாம்பை, அவரது நாய் கடித்து குதறி வானத்தில் பறக்கவிட்டுள்ளது.

குறித்த வீடியோவை அதன் உரிமையாளர் டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். அவர் மிச்சிகனில் உள்ள அலெண்டேலில் உள்ள கிராண்ட் வேலி மாநில பல்கலைக்கழகத்தில் மாணவராக இருக்கலாம் என்று கூறிப்படுகிறது.

டிக் டாக்கில் வெளியிட்டு காட்சியில், நபர் நடந்துச்செல்லும் போது பாதையில் பெரிய பாம்பு ஒன்று வழிமறித்துள்ளது.

இதன் போது சிறிது தூரத்தில் அவரது செல்லப்பிராணியான டாபர்மேன் நாய் உரிமையாளருக்காக காத்து நிற்கிறது.

அவர் அங்கேயே நிற்பதை கண்ட நாய் அவரை நோக்கி ஓடி வருகிறது. அப்போது, பாதையில் குறுக்கே கிடந்த பாம்பை பார்த்ததும் திணறும் நாய், அதை கடித்து குதறி விசிறியடித்து வானத்தில் பறக்கவிட்டுள்ளது.

குறித்த நிகழ்வு முழுவதையும் படமாக எடுத்து அதன் உரிமையாளர் டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்