பேய் நகரமாக மாற்றிய கொரோனா வைரஸ்... அச்சத்தில் சீன மக்கள்: சிக்கிய பிரித்தானியர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரித்தானியர் ஒருவர் சீனாவில் சிக்கிக் கொண்டதாகவும், வீட்டை விட்டு வெளியே வர பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சீனாவில் வுஹான் நகரத்தில், முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பின் இந்த வைரஸ் வேகமாக பரவியதால், 25 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோ பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேகமாக பரவும் இந்த நோயால், ஹுவாங்காங், ஜிங்ஜோ, சியன்னிங், சிபி ஆகிய நகரங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த 5 நகரங்களிலும் சுமார் 35 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

இந்நிலையில் சீனாவில் இருக்கும் பிரித்தானியா ஆசியர் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளதாக பிரபல ஆங்கில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், Kharn Lambert பிரித்தானியரான இவர் சீனாவின் Wuhan-ல் இருக்கிறார். இந்த நகரத்தில் 11 மில்லியன் மக்கள் உள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலினால் தற்போது குறித்த நகரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து மட்டுமின்றி மக்களையே வெளியே பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருக்கும் Lancaster-ஐ சேர்ந்த Kharn Lambert, வுஹானை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

(Image: @KharnLambert/Twitter)

நான் இருக்கும் இடத்தை என்னாலே அடையாளம் காண முடியவில்லை, ஏனெனில் அப்படி இருக்கிறது என்னுடைய விதி, இதற்கு முன் நான் இருக்கும் வீதி சாதரண நேரத்தில் மிகவும் பிசியாக இருக்கும், ஒரு பரபரப்பாகவே இருக்கும், இரவு 2 மணி வரை உணவங்கள் இருக்கும், ஆனால் இப்போது பார்க்கும் போது ஒரு அச்சம் இருப்பதை உணர முடிகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது விடுமுறையில் இருக்கும் அங்கிருக்கும் வெளிநாட்டினர், அதன் பின் உணவிற்காக கண்டிப்பாக வெளியேற வேண்டும் எனவும், அது ஒரு பேய் நகரம் என்று கூறி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்