90 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண்: அடுத்து நடந்த அதிசயம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 90 அடி உயர கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்த பெண் ஒருவர், தானகவே எழுந்து நடந்து செல்லும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் Izluchinsk என்ற நகரத்தில் 27 வயது பெண் ஒருவர் 90 அடி உயர கட்டிடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

வெளியாகியுள்ள வீடியோவில், அந்த பெண் விழுவதையும் சிறிது நேரம் அசைவின்றி கிடப்பதையும் பார்க்கும்போது, நமக்கே திக்கென்றிருகிறது. ஆனால், சிறிது நேரத்திற்குப்பின் அந்த பெண் எழுந்து உட்காருகிறார்.

பின்னர் ஆச்சரியப்படத்தக்க விதமாக, எழுந்து நடந்தும் செல்கிறார். அந்த இடத்தில் அதிக அளவில் பனி பெய்து குவிந்திருந்த நிலையில், அந்த பெண் அந்த பனிக்குவியலில் விழுந்திருக்கிறார்.

பின்னர் சற்று தூரம் சென்ற அந்த பெண், அருகிலிருந்தவர்களிடம் ஆம்புலன்சை வரவழைக்கும்படி கூறினாராம்.

பெயர் வெளியிடப்படாத அந்த பெண், தற்போது மேற்கு சைபீரியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவர்கள் அவருக்கு உள் காயங்கள் இருப்பதாக தெரிவித்தாலும், அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தும் எலும்பு முறிவு ஏற்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்