கட்டுப்படுத்த முடியவில்லை... பயமாக இருக்கிறது..! கொரோனா வைரஸால் 6 நாட்களில் உருவாகும் பிரத்யேக மருத்துவமனை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹானில் ஆரம்பித்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் எதிரொலியால், 6 நாட்களில் பிரத்யேக மருத்துவமனை கட்ட சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த மாதம் சீனாவின் வுஹானில் வெளிவந்த புதிய அபாயகரமான வைரஸ் தற்போது வரை 26 பேரை பலிகொண்டுள்ளது. மேலும், 590 க்கும் அதிகமானோர் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 2002 மற்றும் 2003 க்கு இடையில் உலகளாவிய கொலையாளியாக மாறிய, SARS உடன் கொரோனா வைரஸின் ஒற்றுமை இருப்பதாக கூறியுள்ளனர்.

சீனாவில் முதன்முதலில் தோன்றிய இந்த வைரஸ், ஒன்பது மாதங்கள் வெடித்ததன் முடிவில் இங்கிலாந்து கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியது. 775 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8,000 க்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

Picture: Xinhua News Agency

இந்த நிலையில் அப்படி ஒரு பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிட கூடாது என்கிற அச்சத்தில், சீன நகரம் ஆறு நாட்களில் ஒரு பிரத்யேக மருத்துவமனையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளது.

Picture: FeatureChina

11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட யாங்சே ஆற்றின் முக்கிய நகரமான வுஹான் அரசாங்கம், கைடியன் மாவட்டத்தில் அவசர வசதியை வடிவமைத்து கட்டுமாறு அரசு நடத்தும் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகும் இந்த தற்காலிக சிகிச்சை மையமானது, 2003 இல் SARS ஐ சமாளிப்பதற்காக பெய்ஜிங் நகரில் ஏழு நாட்களில் கட்டப்பட்ட மாதிரியை ஒத்திருக்கும் என கூறப்படுகிறது. அந்த கட்டிடம் 1,000 படுக்கைகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Picture: Xinhua News Agency

அதிகாரப்பூர்வ ஷாங்காய் யுனைடெட் மீடியா குழுமத்துடன் இணைந்திருக்கும் சீன செய்தி நிறுவனமான ஜீமியன் இந்த செய்தியை வெளியிட்டது. Third Engineering Bureau என்கிற கட்டுமான நிறுவனத்திற்கு இந்த பணி வழங்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Picture: FeatureChina

அதன் ஊழியர்கள் நாளை மருத்துவமனையின் வடிவமைப்பை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் அந்தக் கட்டுரையில் ஒன்று முதல் இரண்டு மாடி prefab வீடுகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டில் ஆசியாவில் SARS தொற்றுநோயைச் சமாளிக்க உதவிய ஒரு முன்னணி வைராலஜிஸ்ட், புதிய கொரோனா வைரஸ் 2003 SARS தொற்றுநோயை விட குறைந்தது 10 மடங்கு மோசமாக வெடிக்க வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் வளர்ந்து வரும் தொற்று நோய்களுக்கான மாநில முக்கிய ஆய்வகத்தின் இயக்குனர் மருத்துவர் குவான் யி, கொரோனா வைரஸ் 'கட்டுப்பாடற்றது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

வைரஸைக் கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுப்பதற்குமான 'பொற்காலத்தை' சீன அதிகாரிகள் தவறவிட்டதாகவும் அவர் கூறினார்.

'நான் அதிகம் அனுபவித்திருக்கிறேன். ஒருபோதும் பயந்ததில்லை. பெரும்பாலான வைரஸ்கள் கட்டுப்படுத்தக்கூடியவை. ஆனால் இந்த நேரத்தில் நான் பயப்படுகிறேன்'என்று மருத்துவர் குவான் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்