முடங்கிய 14 நகரங்கள்... ஒரே நகரத்தில் 350,000 பேர் பாதிப்பு: உலகை அச்சுறுத்தும் கொடிய வியாதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 14 நகரங்கள் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதன் முறையாக பரவிய வுஹான் நகரில் மட்டும் 900 பேர் தீவிர சிகிச்சைக்கு உபடுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் முக்கிய நகரங்களும் கிராமங்களும் பொது போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மட்டுமின்றி நோய் பரவுவதை தடுக்க சாலைகளை மூடி வைத்துள்ளன.

மொத்தமாக 14 நகரங்கள் முடக்கப்பட்டுள்ளதால், சுமார் 40 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் புளோரிடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் அடிப்படையில் வுஹான் நகரில் மட்டும் 350,000 பேர் இந்த கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கொரோனா வைரஸினால் இன்னும் நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்தாலும் குறித்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் அமெரிக்கா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதால் ஆங்காங்கே கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்