கொரோனா கொடூரம்... 65 மில்லியன் மக்கள் கொல்லப்படலாம்: 3 மாதம் முன்னரே எச்சரித்த நிபுணர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவை உலுக்கியுள்ள கொடிய கொரோனா வியாதிக்கு அடுத்த 18 மாதங்களில் உலகெங்கும் 65 மில்லியன் மக்கள் மரணமடைவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வியாதி கண்டறியப்படுவதற்கும் 3 மாதங்களுக்கு முன்னரே குறித்த விவகாரத்தை கண்டறிந்து மருத்துவர் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபரில் வெளியான இந்த ஆய்வு முடிவுகளானது, அடுத்த 18 மாதங்களில் உலகெங்கும் மொத்தம் 65 மில்லியன் மக்கள் இந்த கொரோனா வியாதி காரணமாக மரணமடைவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் முக்கிய நகரங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வியாதிக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ள நிலையில் சுமார் 900 பேர் பாதிப்புக்கு உள்ளனதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை பல மடங்கு என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் கொரோனா வியாதி பரவத் தொடங்கியதாக வெளியான தகவல் தம்மை ஒன்றும் பாதிக்கவில்லை என கூறும் முக்கிய மருத்துவ நிபுணரான Dr Eric Toner,

உலக நாடுகளை மொத்தமாக புரட்டிப்போடும் ஒரு கொடிய தொற்றுநோய் பரவும் சாத்தியம் இருப்பதாகவும், அது கொரோனா வைரஸாகவே இருக்க வாய்ப்பு எனவும் மிக நீண்ட காலமாக தாம் எதிர்பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது எவ்வளவு வீரியமான தொற்றும் தன்மையடையது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

மேலும் இது ஒரு நபரிடம் இருந்து வேறொருவருக்கு பரவுகிறது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் எந்த அளவிற்கு என்பது எங்களுக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 6 மாத காலத்தில் உலகில் மொத்த நாடுகளிலும் கொரோனா வியாதி பாதிப்பு இருக்கும் எனவும், அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை 10 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள Dr Eric Toner, வெறும் காய்ச்சலில் தொடங்கி கண்களால் பரவும் ஆபத்து மிக மிக அதிகம் என்பதால் கவனம் தேவை என்றார்.

விமான சேவைகல் மொத்தமாக நிறுத்தப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், சீனாவுக்கு அடுத்து தென் அமெரிக்கா ஆசியா நாடுகளை கொரோனா வேகமாக தாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் என்றார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்