தாயின் சிகிச்சைக்காக பாட்டுப்போட்டிக்கு வந்த சிறுமி: நேரலையில் வந்த சோக செய்தி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தன் தாயின் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்பதற்காக பாடல் போட்டி ஒன்றிற்கு வந்திருந்த சிறுமிக்கு நேரலையில் ஒரு சோக செய்தி வந்தது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த சிறுமி ஜன்னா (14). அவளது தாய் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.

அவரது சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்பதற்காக, பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்தும் பாடல் போட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தாள் ஜன்னா.

அவள் அந்த போட்டியில் வெற்றி பெற்றால், 28,000 பவுண்டுகள் கிடைக்கும். அதை தனது தாயின் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டிருந்தாள் அவள். போட்டியில் அவள் பாடிய பாடல் நடுவர்களைக் கவர, அவள் அடுத்த சுற்றுக்கு செல்ல தகுதி பெற்றுள்ளதாக அறிவித்தார்கள் அவர்கள்.

மகிழ்ச்சியில், உடனே தன் தாயை தொலைபேசியில் அழைத்து இந்த சந்தோஷமான செய்தியை சொல்ல விரும்பினாள் ஜன்னா.

ஆனால், தொலைபேசியில் அவளது தாய் பேசவில்லை. அதற்கு பதிலாக, ஜன்னாவின் மாமா பேசினார்.

ஜன்னா, நீ வலிமையுடையவளாக இருக்கவேண்டும் என்றும் உன் குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் உன் தாய் கூறியிருக்கிறார் என்று பேச்சைத் தொடங்கினார் ஜன்னாவின் மாமா.

நாம் அம்மாவை நேசிக்கிறோம், ஆனால், நம்மைவிட இறைவன் உன் அம்மாவை அதிகம் நேசிப்பதால், அவர் அம்மாவை அழைத்துக்கொண்டார் என்று கூறிய ஜன்னாவின் மாமா, சற்று முன்தான் உன் தாய் இறந்துபோனார் என்று கூற அதிர்ச்சியில் உறைந்தாள் ஜன்னா.

பின்னர் கைகளால் வாயைப் பொத்திக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்த ஜன்னாவைத் தேற்றுவதற்காக வந்த நடுவர்களும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

தாயின் சிகிச்சைக்காக பாட வந்த அந்த சிறுமி கண்ணீர் விட்டுக் கதறும் அந்த வீடியோவைப் பார்ப்பவர்களுக்கும் கண்டிப்பாக கண்ணீர் வரும் என்பதில் சந்தேகமேயில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்