கொரோனா வைரஸ்.. சீனாவின் ரகசிய உயிரியல் போரின் விளைவு..! முன்னாள் இராணுவ அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

உலகளவில் பரவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய வுஹான் ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் மிக மேம்பட்ட வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகமான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி குறித்த செய்தியை 2015 ஆம் ஆண்டு உள்ளுர் வுஹான் தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது, அதே செய்தியை ரேடியோ ஃப்ரீ ஆசியா இந்த வாரம் மறுஒளிபரப்பியது.

சீனாவில் ஆபத்தான வைரஸ்களை ஆய்வு செய்யும் திறன் கொண்ட ஒரே தளம் இந்த ஆய்வகமாகும்.

சீன உயிரியல் போரை ஆய்வு செய்த முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அதிகாரி டேனி ஷோஹாம் கூறியதாவது, இந்த வுஹான் இன்ஸ்டிடியூட் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுத திட்டத்துடன் தொடர்புடையது என்றார்.

இந்த இன்ஸ்டிடியூட்ல் உள்ள சில ஆய்வகங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அடிப்படையில், சீன உயிரியல் ஆயுத திட்டத்துடன் குறைந்தபட்சம் தொடர்புடையது. ஆனால் சீன உயிரியல் போரின் முக்கிய அங்கமாக இல்லை என்று ஷோஹாம் கூறினார்.

உயிரியல் ஆயுதங்களுக்கான பணிகள் இரட்டை உள்ளுர்-இராணுவ ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன, மேலும் இது நிச்சயமாக ரகசியமானது என்று தெரிவித்தார்.

ஷோஹாம் மருத்துவ நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1970 முதல் 1991 வரை அவர் மத்திய கிழக்கு மற்றும் உலகளவில் உயிரியல் மற்றும் வேதியியல் போருக்கான இஸ்ரேலிய இராணுவ உளவுத்துறையுடன் மூத்த ஆய்வாளராக இருந்தார், லெப்டினன்ட் கர்னல் பதவியிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்