வீட்டில் மர்மமாக உயிரற்று கிடந்த குழந்தைகள்... தெருவில் அசைவில்லாமல் இருந்த தாய்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஐயர்லாந்தில் வீட்டிற்குள் மூன்று குழந்தைகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

தலைநகர் டப்ளின், நியூகேஸ்டில் பார்சன் கோர்ட் கிராமத்தை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

6 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள், 10 வயதுடைய சிறுமி ஆகியோர் வீட்டிற்குள் தரையில் இறந்து கிடந்ததாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தெருவில் மயங்கிய நிலையில் அசைவில்லாமல் கிடந்த 3 குழந்தைகளின் தாய் என நம்பப்படும் 40 வயதான பெண்ணை மீட்ட டாக்சி ஓட்டுநர், டல்லாட் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்று அனுமதித்துள்ளார்.

mirror

மேலும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், மூன்று குழந்தைகளும் போதை அல்லது விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கான ஆதாரம் வீட்டில் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கொலை தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனே பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்