கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்... மற்றவர்களுக்கு நோயை பரப்ப செய்த கொடூர செயல்: சிசிடிவி-யில் சிக்கிய சம்பவம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
682Shares

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர் அதை மற்றவர்களுக்கு பரப்பும் கெட்ட எண்ணத்தோடு செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று பிரான்ஸ் உட்பட ஒரு சில ஆசிய நாடுகளுக்கும் பரவியுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவர்கள், நிபுணர்கள் போராடி வரும் நிலையில், சீனாவில் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் மற்றவர்களுக்கு அதை பரப்பும் நோக்கத்தோடு செயல்பட்டது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில், தலையில் முக்காடு அணிந்த நபர் ஒருவர் லிப்டுக்குள் ஏறுகிறார். பின்னர், லிப்டில் இருக்கும் பொத்தான்கள் மீது எச்சில் துப்புகிறார்.

குறித்த நபர் வுஹானில் உயர்நிலைப் பள்ளி மாணவர் எனவும், அவர் சீனாவின் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாட தனது சொந்த ஊரான ஹன்ஜியாங் சின்செங்கிற்குத் திரும்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மாணவர், பின்னர், நோய் மற்றவர்களுக்கு பரப்பும் நோக்கத்தோடு லிப்டின் பொத்தான்கள் மீது எச்சில் துப்பினார் என்று இணையத்தில் சிசிடிவி காட்சிகள் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்