உயிர் கொல்லும் கொரோனா கொடூரம்: சீன ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1975Shares

சீனாவில் தீயாக பரவி வரும் கொடூர கொரோனா வியாதிக்கு இதுவரை 41 பேர் மரணமடைந்துள்ள நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

சீனாவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி ஜி ஜிங்பிங், இது கடுமையான நேரம் என குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜி ஜிங்பிங், அந்த கூட்டத்தில் தெரிவித்த கருத்தாக அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா வெளியிட்ட அறிவிப்பில்,

"புதிய கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது, நாடு கொடுமையான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. கட்சியின் மத்தியக் குழுவின் அனைத்து தலைமையையும் வலிமைப்படுத்திச் செயல்படுத்துவது அவசியமாகும்.

நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும், தடுப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும்,

இந்த போராட்டத்தில் நிச்சயம் வெல்ல முடியும் என ஜனாதிபதி ஜின்பிங் தெரிவித்தார் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனா முழுவதும் 29 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் மொத்தமாக 237 பேர் கொரோனா வியாதிக்கு இரையாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்த காரணத்தைக் கொண்டும் சிகிச்சை அளிப்பதை நிராகரிப்பதோ, தாமதப்படுத்துவதோ கூடாது என அரசு நிர்வாகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மட்டுமின்றி தேவையான அனைத்து உதவிகளையும், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் உடனடியாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வியாதியின் பிறப்பிடம் என கருதப்படும் ஹூபே பிராந்தியத்தின் வுஹான் நகருக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் தோய்வில்லாமல் மேற்கொள்ளவும் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

சீனா முழுவதும் 41 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் ஹூபே பிராந்தியத்தில் மட்டும் 39 பேர் மரணமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

போக்குவரத்து மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ள நகரங்களில் மேலும் மூன்று நகரங்களைச் சேர்த்துள்ளனர்.

மொத்தமாக ஹூபே மாகாணத்தில் 16 எனக் கொண்டு வந்துள்ளது. இந்த நகரங்கள் அனைத்தும் நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களை விட அதிகமான மக்கள்தொகையை உள்ளடக்கியது.

11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரில் இருந்து மக்கள் வெளியேறுவதை நிர்வாகம் மொத்தமாக தடை செய்துள்ளது.

இதனால் கொரோனா வியாதி வெளி நகரங்களில் பரவுவதை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சீனாவின் சுற்றுவட்டார நாடுகளான ஹாங்காங், மக்காவோ, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், வியட்நாம், நேபாளம், ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் கொரோனா வியாதி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்