தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா, வனுவாட்டு தீவு நாட்டின் வங்கியில் கணக்கு வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
சிறப்பு பூஜை செய்ததற்கு கட்டணம் செலுத்துமாறு, நித்யானந்தா தரப்பில், ஒருவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், வனுவாட்டு தேசிய வங்கியின் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதன்மூலம், வனுவாட்டு தலைநகர் போர்ட் வில்லாவில் உள்ள வங்கிக் கிளையில் அவர் கணக்கு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து, 1,750 கி.மீ., தொலைவில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது வனுவாட்டு. வருமான வரி உள்ளிட்ட எந்த வரிகளும் இல்லாத நாடுகளில், வனுவாட்டும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள வங்கியில், கணக்கு தொடங்கும் நபர்களின் தகவல்களும் பத்திரமாக பாதுகாக்கப்படும். இதனால் நித்யானந்தா, அங்குள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.