சலவை இயந்திரத்தினுள் பிஞ்சுக்குழந்தை... இரத்தக்கறையுடன் மனைவி: அதிர்ச்சியில் உறைந்த கணவன்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

புதிதாக பிறந்த குழந்தையை பெற்ற தாயே சலவை இயந்திரத்திற்குள் அடைத்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 31 வயதான சிகையலங்கார நிபுணர் நடேஷ்தா இசட், தனது நான்காவது குழந்தையை சனிக்கிழமை இரவு பெற்றெடுத்துள்ளார்.

பின்னர் குறைமாதத்தில் பிறந்த குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் அடைத்து வைத்துள்ளார்.

இதற்கிடையில் வீட்டிற்கு வந்த அவருடைய கணவன் டேனிஸ், மனைவி இரத்தக்கறையுடன் கிடப்பதை பார்த்து ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நடேஷ்தாவிற்கு பிறந்த குழந்தை சலவை இயந்திரத்திற்குள் இறந்த நிலையில் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடேஷ்தாவிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் தனக்கு குழந்தை பிறக்கவே இல்லை என கொலைக்குற்றத்தை மறைத்துள்ளார்.

ஆனால் பொலிஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்குற்றத்தை எதிர்கொள்வார் எனவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, நடேஷ்தாவிற்கு முதல் கணவரின் மூலம் ஒரு மகனும், தற்போதைய கண்வன் மூலம் இரண்டு மகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஒரு நல்ல தாய் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers