தலிபான்களால் சுட்டுவீழ்த்தப்ட்ட விமானம்: யாரும் உயிர்பிழைக்கவில்லை என அறிவிப்பு..! வெளியான வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் காபூலுக்கு தென்மேற்கே ஒரு வெளிநாட்டு இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாகவும், விமானம் அமெரிக்க விமானப்படைக்கு ஒத்த சின்னத்தை கொண்டுள்ளது என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க பாதுகாப்புத் துறை இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக வெளியான செய்திகளை விசாரிப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விபத்துக்குள்ளான ஒரு விமானம் எரிந்து கிடப்பதைக் காட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன.

வீடியோவில், அழிக்கப்பட்ட விமானம் அமெரிக்க விமானப்படைக்கு ஒத்த சின்னத்தை கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்புத் துறை பயன்படுத்திய ஒரு வகை கண்காணிப்பு விமானமான பாம்பார்டியர் இ -11 ஏவை ஒத்த வெளிநாட்டு இராணுவ விமானம் இது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் காபூலுக்கு தென்மேற்கே உள்ள தொலைதூர மற்றும் மலை மாவட்டமான பனி மூடிய தே யாக் நகரில் ஜெட் கீழே சென்றபோது விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

காஸ்னி மாகாணம் தலிபான் கட்டுப்பாட்டில் இருந்து வருவதால், மீட்பு படையினரும் புலனாய்வாளர்களும் சம்பவ இடத்தை அணுக முடியவில்லை.

இரண்டு விமானிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, விமானம் முற்றிலுமாக எரிந்துவிட்டது. அது வெளிநாட்டு விமானம் என்று கஸ்னி ஆளுநர் வாகீதுல்லா கலிம்சாய் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அவர்களுடைய செய்தித்தொடர்பாளர் ஒருவர், அமெரிக்க இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், விமானத்தில் இருந்த உயர்மட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers