கொடூர கொரோனா வியாதியை அடுத்து அச்சுறுத்தும் லசா காய்ச்சல்: எகிறும் மரண எண்ணிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா வியாதி ஆசிய நாடுகளில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 என அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் நைஜீரிய அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், நைஜீரியாவில் லசா காய்ச்சலின் தீவிரம் அதிகமாகி உள்ளது. லசா காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர்.

நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 மாகாணங்கள் இக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது. ஆனால் இவ்வைரஸ்கள் அளவுக்கு லசா ஆபத்தானது அல்ல என்று விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்துள்ளன.

லசா வைரஸ் காரணமாக கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இக்காய்ச்சல் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது.

முன்னதாக, சியரா லியோன், லைபீரியா, டோகோ மற்றும் பெனின் ஆகிய இடங்களில் இந்த நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேற்கு ஆபிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் லாசா காய்ச்சல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 100,000 முதல் 300,000 வரை உள்ளது, இதில் 5,000 பேர் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவ நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் இந்த நோய் நைஜீரியாவில் 160 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers