வெளிநாட்டில் இலங்கையர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு? வெளிவரும் புதிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வர்த்தக கப்பல் ஒன்றில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் 6 பேருக்கு கொடிய கொரோனா வியாதி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து எகிப்து பயணப்படும் வர்த்தக கப்பலில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கே கொரோனா வியாதி பாதிப்பு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த வர்த்தக கப்பலானது சீனாவின் முக்கிய 3 துறைமுகங்களில் 5 நாட்கள் தங்கிச் சென்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த மாதம் 11 ஆம் திகதி குறித்த கப்பலானது நிங்போ துறைமுகத்திலும், 13 ஆம் திகதி ஜியாமென் துறைமுகத்திலும் நங்கூரமிடப்பட்டிருந்தது, பின்னர் ஷெகோ துறைமுகத்திலும் குறித்த கப்பல் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த கப்பல் வந்து சென்ற துறைமுகங்கள் வுஹான் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளன, இது கொரோனா வைரஸின் மையமாக அடையாளம் காணப்பட்டது.

மேலும் வுஹானிலிருந்து 922 கி.மீ தூரத்தில் நிங்போ துறைமுகம் அமைந்துள்ளது. இதனிடையே இன்று காலை குறித்த கப்பலானது இலங்கையின் காலி நகருக்கு அருகாமை வழியாக கடந்து சென்றுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி எகிப்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கையர்கள் 6 பேரும் கொரோனா வியாதி அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers