சீனாவை விட்டு வர மறுக்கும் பிரித்தானியர்: உணவுக்காக செய்யும் பரிதாப செயல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவிலிருக்கும் வெளிநாட்டவர்கள் பலரும் சொந்த நாடு திரும்ப துடித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பிரித்தானியர் மட்டும், சீனாவை விட்டு அல்ல, தான் இருக்கும் அறையை விட்டுக்கூட வெளியே வர மறுத்துள்ளார்.

மான்செஸ்டரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அந்த பிரித்தானியர், தனது மனைவி மற்றும் ஒன்பது மாதக் குழந்தையான தனது மகளுடன் வசித்து வருகிறார்.

வுஹானிலிருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் அந்த பிரித்தானியர், வீட்டை விட்டு வெளியேறினால், எங்கே, தானே வீட்டுக்கு கொரோனா வைரஸைக் கொண்டு வந்துவிடுவேனோ என்ற பயத்தில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாராம்.

தனது குழந்தை பிறந்து வெறும் ஒன்பது மாதங்களே ஆகின்றன என்பதால், ஒருவேளை அவளுக்கு கொரோனா வைரஸ் தொற்றிவிட்டால், அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அவர் அவ்வளவு பயந்திருக்கிறார்.

அவருக்கும் அவரது மனைவிக்கும் எந்த தொற்றும் இல்லையென்றாலும், வெளியே சென்றால் நோய் தொற்றிவிடும் என்று அஞ்சி குடும்பமே வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறது.

சரி, உணவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றால், அதற்கு அவர் சொல்லும் பதில் பரிதாபத்தை வரவழைக்கிறது.

தனது மனைவியின் குடும்பத்தோடு புத்தாண்டைக் கொண்டாடியபின், மீதமான மாமிசம், காய்கறிகள் அத்தனையையும் அவர்கள் இவர்களிடம் கொடுத்தார்களாம்.

அந்த உணவுப் பொருட்களை தினமும் ரேஷன் போல் கொஞ்சம் கொஞ்சமாக கணக்கிட்டு செலவு செய்து உயிர் வாழ்ந்து வருகிறதாம் அவர் குடும்பம்.

சரி, அவர் ஏன் பிரித்தானியாவுக்கு திரும்ப விரும்பவில்லை என்று கேட்டால், அவர் கூறும் காரணம், அவர் மனைவி ஒரு சீனர்!

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான கர்ப்பிணி ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் குணமானதுடன், தாயும் சேயும் நன்றாக இருப்பதாக உள்ளூர் தொலைக்காட்சி மூலம் அறிந்துகொண்டதாகவும், அதைக் கேட்டதிலிருந்து தாங்களும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers