ஆயிரக்கணக்கானோர் இறக்க வேண்டும்: கொரோனா வைரஸ் பற்றி சர்ச்சை..! Kobe Bryant-ன் தீவிர ரசிகன் கைது

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பரவுவதை விரும்புவதாக கருத்து தெரிவித்த சீன இளைஞரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரரான Kobe Bryant, ஹெலிகாப்டர் விபத்தில் தனது மகள் உட்பட 7 பேருடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு உலகநாடுகளின் பல பகுதிகளில் இருந்தும், அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரரும், Kobe Bryant-ன் தீவிர ரசிகருமான ஹான் என அடையாளம் காணப்பட்ட இளைஞர் கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்கனவே 132 உயிர்களை இழந்து சீனா தத்தளித்து வரும் நிலையில், கோபி பிரையன்ட் இறப்பதை விட கொரோனா வைரஸ் 'பரவுவதையும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதையும்' விரும்புவதாக ஒரு குழு உரையாடலில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து கோபமடைந்த சிலர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அவரை கைது செய்த பொலிஸார், ஏழு நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers