வேண்டுமென்றே எச்சிலை துப்பி நோயை பரப்புகிறார்கள்: இளம் ஆசிரியை அதிர்ச்சி தகவல்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சுகாதாரப் பணியாளர்கள் மீது வேண்டுமென்றே எச்சிலை துப்பி கொரோனா வைரஸ் நோயை பரப்புவதாக தென் ஆப்பிரிக்க ஆசிரியை ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

வுஹான் தீவில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸானது சீனா துவங்கி உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் பலி எண்ணிக்கை 132 ஆக அதிகரித்திருப்பதோடு, மூன்று நாட்களில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலோனோர், வுஹானில் வசித்து வந்தவர்கள். அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதால் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

Credits: Facebook

இந்த நிலையில் வுஹானில் சிக்கித்தவித்து வரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 23 வயதான ஜெசிகா பெய்லிங் என்ற ஆசிரியை, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுமென்றே தங்களுடைய முகமூடிகளை கழற்றி சுகாதாரப் பணியாளர்கள் மீது எச்சிலை துப்பி நோயை பரப்புவதாக நான் கேள்விப்பட்டேன். அதேபோல 'ஒரு அபார்ட்மென்ட் லிஃப்டில் உள்ள அனைத்து பொத்தான்களிலும் ஒரு மனிதன் துப்புகிற ஒரு வீடியோவை நான் பார்த்தேன்.'

நான் உடல் முழுவதும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துள்ளேன். அப்படி இருந்தும்கூட எனக்கு வெளியில் செல்வதற்கு பயமாக இருக்கிறது எனக்கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers