படுக்கையில் கைகளை கோர்த்தபடி கடைசி நிமிடங்களில் இருக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட தம்பதி!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிருக்கு போராடும் வயதான தம்பதி ஐசியூ வார்டில் கைகளை கோர்த்தபடி கடைசி நிமிடங்களில் இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி மனதை உருக்கியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17,200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80களில் உள்ள வயதான தம்பதி மருத்துவமனையின் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் அருகருகில் படுத்திருக்கும் நிலையில் கைகளை கோர்த்தபடி கடைசி நிமிடங்களை எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்த வீடியோவை ஜியாங் வீ என்பவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், 80களில் உள்ள வயதான தம்பதி கொரோனா பாதிப்பால் ஐசியூவில் உள்ளனர்.

அவர்கள் சந்தித்து கொள்வது இதுவே கடைசியாக இருக்கலாம் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி பலரையும் கண்கலங்க செய்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்