கொரோனாவில் இருந்து தப்பி தாய்நாட்டுக்கு வந்த பெண்கள்! விமானநிலையத்தில் நடந்த அசெளகரியத்தின் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சீனாவில் இருந்து தாய்நாட்டிற்கு விமானத்தில் வந்து இறங்கிய இந்தோனேசியர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது அவர்களை அசெளகரியமான சூழலுக்கு உள்ளாக்கியது.

சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸால் உலகம் முழுவது பீதி ஏற்பட்டுள்ளது. Wuhan நகரில் தான் வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவை சேர்ந்த மக்கள் Wuhan நகரில் இருந்து தாய்நாட்டுக்கு நேற்று தனி விமானத்தில் திரும்பினார்கள்.

விமானத்தில் இருந்து கீழே இறங்கி பயணிகள் நடந்து வந்த போது அங்கிருந்த ஊழியர்கள் அவர்கள் மீது கிருமிநாசினியை தெளித்தார்கள்.

பயணிகள் அனைவரும் பெண்களாக இருந்த நிலையில் அவர்கள் கண்கள் மீது அது பட்டதில் மிகவும் அசெளகரியமாக உணர்ந்தார்கள்.

அப்போது கண்களை மூடி கொண்டே வேகமாக நடக்கவும் என கிருமிநாசினியை தெளித்த ஊழியர்கள் பயணிகளுக்கு உத்தரவு போட்டார்கள்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சொந்த நாட்டுக்கு திரும்பிய மக்களை இப்படியா நடந்துவது என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்