கொரோனா வைரஸ் தாக்கிய பெண்: கதற கதற பொலிசார் செய்த செயல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
#S

கொரோனா வைரஸ் தாக்கிய ஒரு பெண் கதறக் கதற, அவரை வீட்டிற்குள் வைத்து அடைத்து இரும்புக்கம்பிகளால் சீல் வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியர்கள் இருக்கும் வீடுகளை சீல் வைக்கும் நடவடிக்கைகளை பொலிசார் தொடங்கியுள்ளதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

கொரோனா வைரஸ் தாக்கிய ஒரு பெண் வீட்டுக்குள்ளிருந்து சத்தமிட, அதிகாரிகளோ அவரது வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை பெரிய பெரிய இரும்பு கம்பிகளால் சீல் வைக்கின்றனர்.

அவர்கள் வெளியே வந்தால் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் பொலிசார்.

அது மட்டுமின்றி, அந்த வீட்டு வாசலருகே, விலகியிருங்கள் என்று எச்சரிக்கும் அறிவிப்பு போர்டு ஒன்றையும் ஒட்டிச் செல்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 360ஐத் தொட்டுவிட்டதையடுத்து, நோய் பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் சீன அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்