8 மாத குழந்தையின் தலையை துண்டாக்கிய நபருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

எட்டு மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த நபரின் மேல்முறையீட்டை மனு மீதான விசாரணையில் அவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பெலாரஸ் நாட்டை சேர்ந்த நடாலியா கோல்ப் (26) என்கிற தாய் தனது கணவர் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு நபரான விக்டர் சியார்ஹெல் (48) என்பவருடன் சேர்ந்து மது அருந்துகொண்டிருந்துள்ளார்.

போதை உச்சந்தலைக்கு ஏறிய நிலையில், அழுதுகொண்டிருந்த நடாலியாவின் 8 மாத குழந்தை ஹன்னாவை விக்டர் கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் குழந்தையின் தலையை துண்டாக்கி கொலை செய்துள்ளார். இதற்கிடையில் தனது மற்ற இரண்டு மகள்களுடன் வெளியில் சென்றிருந்த லியோனிட் திரும்பி வந்ததும், குழந்தை இரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட விக்டருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையும், நடால்யாவிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் இருவரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து அறிவித்தது.

முன்னதாக ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனையை அனுமதிக்கும் ஒரே நாடான பெலாரஸில், 1991 ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் நாடு சுதந்திரமானதிலிருந்து 400 க்கும் மேற்பட்ட ஆண்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்