கொரோனோ வைரஸால் குழந்தை பெற்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! கண்கலங்க வைக்கும் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பால் இருக்கும் தந்தைக்கும், சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாய்க்கும் அவர்களின் குழந்தை காட்டப்படும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

வுஹான் நகரத்தில் துவங்கிய கொரோனோ வைரஸ், தற்போது நாட்டையே உலுக்கி வருகிறது. இதன் காரணமாக பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வுஹான் மாநிலத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் திகதி Heilongjiang மாகாணத்தை சேர்ந்த Ms Gong என்ற நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்து வுஹான் நகரத்தில் இருக்கும் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டு, மருத்துவர் கண்காணிப்பிலே கவனிக்கப்பட்டு வந்தார்.

ஏனெனில் அவருடைய கணவருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இருவரும் தனிமைபடுத்தப்பட்டு, மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

(Image: AsiaWire)

இதையடுத்து தற்போது Ms Gong-க்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அங்கிருக்கும் மருத்துவர்கள் குழந்தைக்கு பாதுகாப்பு உடை உடுத்திவிட்டு, அதன் பின் அவருடைய தாய் மற்றும் தந்தையிடம் கொண்டு சென்று முகத்தை காட்டுகின்றனர்.

அவர்கள் பிறந்த குழந்தையை தொட முடியாமல், ஒரு வித ஏக்கத்துடன் பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

(Image: AsiaWire)

(Image: AsiaWire)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...