கொரோனோ வைரஸால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு... குடும்பத்தினருக்கு சீனா விடுத்துள்ள உத்தரவு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல்களை விரைவில் தகனம் செய்யுமாறு, அது பரவாமல் இருக்க இறுதிச்சடங்கினை மிகவும் எளிமையாக நடத்தும் படி சீனா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் மற்றும் ஹுபே நகரத்தை கொரோனோ என்னும் கொடிய வைரஸ் மிரட்டி வருகிறது. இதன் காரணமாக 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலக முழுவதிலும் 22,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதைக் கட்டுப்படுத்த சீனா அரசு முயன்று வருகிறது. கடந்த 2002-2003 ஆண்டுகளில் வந்த சார்ஸ் வைரஸை விட இது மிகவும் ஆபத்தானது, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பெய்ஜிங்கின் சிவில் விவகார அமைச்சககம், கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனோ வைரஸால் இறந்தவர்களை, உறவினர்கள் உடல்களை விரைவாக அருகிலே தகனம் செய்யும் படியும், இந்த நோய் பரவுக் கூடிய நோய் என்பதால், இறுதிச்சடங்குகளில் அதிக ஆட்கள் கூடாமல் எளிமையாக நடத்தும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனோ வைரஸால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளைக் கையாளும் ஊழியர்கள் பாதுகாப்பு கிளவுஸ் அணிய வேண்டும் மற்றும் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக வெப்பநிலை சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிவில் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருமணம் என்றால் கூட்டம் கூடும், குறிப்பாக சீனாவில் பிப்ரவரி 2-ஆம் திகதி திருமணத்திற்கு பிரபலமான நாள், ஏனெனில் 02/02/2020 என்பதால், இந்த திகதியில் திருமணம் வேண்டாம் என்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை கூட்டம் கூடும் வைபோகங்கள், நிகழ்ச்சிகள் எதுவும் வேண்டாம் என்று ஹுபே நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்