வௌவாலுக்கு பதில் ஆமை கறி..! சீன மக்களை கொந்தளிக்க வைத்த இளைஞரின் வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவில் இளைஞர் ஒருவர் ஆமை கறி சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 27 உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. 426 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 20,626 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வௌவால், பாம்பு உட்பட விலங்குகளை உட்கொண்டதின் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. நோய் தீவிரமாக பரவியதை அடுத்து நாட்டில் வனவிலங்குகளின் வர்த்தகத்தை சீனா தடை செய்தது.

சமீபத்தில், பெண் ஒருவர் வௌவால் சூப் சாப்பிடும் வீடியோ இணையத்தில் பரவியது. இதை கண்ட நெட்டிசன்கள் அப்பெண்ணை திட்டி தீர்த்தது மட்டுமில்லாமல் மிரட்டலும் விடுத்தனர்.

பின்னர், குறித்த வீடியோ 3 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என அப்பெண் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸின் தீவிரத்தால் சீனாவில் வௌவால் சாப்பிடுவது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்நிலையில், வௌவாலுக்கு மாற்றாக இளைஞர் ஒருவர் ஆமை கறி சாப்பிடும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் அந்த இளைஞர் திட்டி தீர்த்தும் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். எனினும், குறித்த வீடியோ எப்போது எடுத்தது என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்