10 லட்சம் பேர் எங்கள் நாட்டை நோக்கி வருகின்றனர்... கண்டிப்பாக மோசமான பதிலடியை கொடுப்போம்: ஜனாதிபதி அதிரடி

Report Print Basu in ஏனைய நாடுகள்

சிரியாவின் இட்லிப் நகரத்திலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தாங்கள் நாட்டு எல்லைகளை நோக்கி அணிவகுத்து வருவதாக துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஆதரிக்கும் சிரியாவின் அரசாங்கத்தின் இராணுவப்படை இட்லிப் நகரில் நடத்திய தாக்குதலில் 6 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் துருக்கி-சிரியா இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கியேவில் பேசிய துருக்கி ஜனாபதிபதி எர்டோகன், துரதிஷ்டவசமாக, நாட்கள் கடந்தும் இட்லிப் நகரின் நிலைமை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

துருக்கி மிகவும் பொறுமையாக இருந்தது. 3-4 மில்லியன் மக்கள் வாழும் இட்லிப் நகரில் ரஷ்ய ஆதரிக்கும் சிரியா அரசாங்கம் நடத்திய தாக்குலால், அங்கிருந்த மக்கள் தற்போது துருக்கி எல்லையை நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் மதிப்பீட்டின் படி துரதிஷ்டவசமாக, இட்லிப் நகரத்திலிருந்து தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் துருக்கி எல்லையை நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றனர்.

இட்லிப்பில் சிரிய அரசாங்கத்தின் இராணுவப் படை நடத்திய தாக்குதலில் துருக்கி இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு வான்வெளி மற்றும் தரை தாக்குதல்களின் மூலம் தீவிரமான பதிலடியை நாங்கள் தருவோம்.

சிரியா அமைதி செயல்பாட்டின் ஒரு பகுதியாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தங்களின் பொறுப்பை என்னவென்று எல்லோருக்கும் தெரியும் என நம்புகிறோம். அதன் படி துருக்கி தொடர்ந்து செயல்படும் என எர்டோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்