ஆப்கானிஸ்தானிடம் சரணடைந்த இந்திய பயங்கரவாதிகள்!- ஐ.நா அறிக்கை

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானிடம் சரணடைந்த 1,400 பயங்கரவாதிகளில் இந்தியர்களும் இருந்ததாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கண்காணிப்பு குழு ஒன்று கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான ஐஎஸ்ஐஎல்-கே பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகின்றது. ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹார் மாகாணத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த இந்த அமைப்புக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் தடை வித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் தாலிபான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக நாங்கர்ஹார் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ஐஎஸ்ஐஎல்-கே அமைப்பு விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

இந்த நடிவடிக்கையின்போது அந்த அமைப்பிற்கு ஆதரவாக இருந்து வந்த 1400பேருக்கு அதிகமானோர் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.

அவர்கள் பலர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில், இந்தியா, அஜர்பைஜான், கனடா, பிரான்ஸ், மாலத்தீவுகள், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி, உஸ்பெகிஸ்தான் போன்ற வெளிநாட்டவர்களும் அதில் இருந்தனர்.

ஐஎஸ்ஐஎல்-கே அமைப்புக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தானில் தற்போது 2,500 போ் சண்டையிட்டு வருகின்றனா். அவா்களில் சுமாா் 2,100 போ் குனாா் மாகாணத்தில் உள்ளனா் என்று அந்த அறிக்கையில் ஐ.நா. கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்