கொரோனா உருவானதை டிசம்பர் மாதமே கண்டுபிடித்த மருத்துவர்! அவரை மிரட்டி வைத்த சீனா அரசு.. அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் உருவானதை மருத்துவர் ஒருவர் டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்த நிலையில் அதை சீன அரசு வெளியே சொல்ல கூடாது என்று அவரை கடுமையாக மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் மிகவும் கொடூரமான வைரஸாக மாறியுள்ள கொரோனாவால் இதுவரை 425 பேர் பலியாகியுள்ளனர்.

20,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சீனாவை சேர்ந்த லி வென்லியாங் என்ற மருத்துவர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்.

வுஹான் நகரின் மத்திய மருத்துவமனையில் லி பணிபுரியும் நிலையில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில், காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதி ஆகியுள்ளார். இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கி இருக்கிறது.

இந்த வைரஸை சோதித்த லி அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

இதனால் உடனடியாக அவர் மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த ஒரே வாரத்தில் லி வீட்டு கதவை சீன அதிகாரிகள் தட்டி உள்ளனர். இந்த வைரஸ் குறித்து எதுவும் பேச கூடாது. யாரிடமும் விவாதிக்க கூடாது. சமுக வலைத்தளங்களில் குறிப்பிட கூடாது என்று எச்சரித்துள்ளனர். அதோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் ஜனவரி 10ம் திகதி லி காய்ச்சல் வந்து படுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தன்னுடைய ரத்த மாதிரியை சோதனை செய்தவர் அதிர்ந்து போய் இருக்கிறார். ஆம், லி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அந்த வைரஸ் பரவி உள்ளது. இதனால் உடனடியாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்பூவில் அதை போஸ்ட் செய்தார்.

அதில், எனக்கு புதிய வகை வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் எனக்கு தெரிந்து மட்டும் 10 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை வெளியே சொல்ல முயற்சித்த என்னை, சீன அரசு மிரட்டுகிறது.

சீன மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்பின்தான் சீன அரசு கொரோனா வைரஸ் பரவியதை ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக லி வென்லியாங்கிடம் சீன அரசு மன்னிப்பும், நன்றியும் தெரிவித்துள்ளது. தற்போது லி வென்லியாங்கை சீன மக்கள் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்