அலறிய பெண்ணை இரக்கமில்லாமல் கற்களாலே அடித்துக்கொன்ற கும்பல்: அதிர்ச்சி வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் ஒரு கும்பல் இரக்கமே இல்லாமல் பெண் ஒருவரை கற்களால் அடித்துக் கொல்லும் வீடியோ காட்சி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்வையாளர்கள் கூட்டத்தின் முன் பெண் ஒருவர் கொடூரமாக கற்களால் தாக்கப்படுவதையும், வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிடுவதையும் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தித் தொடர்பாளர், தலிபான்கள் போராளிக்குழு 'கொடுமை மற்றும் அட்டூழியம்' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த காட்சிகள் 2015 ல் இருந்து வந்தவை என்று தலிபான்கள் கூறுகின்றனர். ஆனால் ஆர்வலர்கள் அவற்றை நம்பவில்லை, நாட்டின் சுதந்திர மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த காட்சிகள் எப்போது எடுக்கப்பட்டது, அந்த பெண் ஏன் கொல்லப்பட்டார் என்பதை நிறுவ முயற்சிப்பதாக மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

வீடியோவை காண...

கோர் மாகாணத்தில் 'சில நாட்களுக்கு முன்பு' தலிபான்கள் அந்தப் பெண்ணை கல்லெறிந்ததாக ஆப்கானிய பிரபல ஆர்வலர் லைலா ஹைதாரி சனிக்கிழமை தெரிவித்தார்.

"சட்டம் மற்றும் ஒழுங்கு சரியாக இல்லாத நிலையில் அவர்களின் வன்முறையின் தீவிரம் மற்றும் பெண்களுக்கு எதிராக அவர்களால் என்ன செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியும்" என்று அவர் கூறினார்.

'நெருங்கி வரும் இந்த திகிலுக்கு எதிராக நாம் எவ்வாறு எழுந்து நிற்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.' எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்