வாழ்நாளில் அவளை என்னால் மீண்டும் பார்க்க முடியாமல் போகலாம்: பல மில்லியன் பேர் பார்வையிட்ட நெகிழ்ச்சி வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் மரணப் படுக்கையில் இருக்கும் மனைவிக்கு முதியவர் ஒருவர் இறுதி விடையளிக்கும் காட்சிகள் வெளியாகி இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டூவில் கடந்த மாதம் 85 மற்றும் 87 வயதுடைய ஜாங் மற்றும் அவரது மனைவி வென் ஆகிய இருவரும் ஒரே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜாங் என்பவருக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்கள் இருப்பதாக அவர்களை அனுமதித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜாங் ஜனவரி 16 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அல்சைமர் நோயாளியான அவரது மனைவி மறுநாள் சுவாசக் கோளாறு காரணமாக சுயநினைவை இழந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மனைவியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிந்த ஜாங், கடைசியாக ஒருமுறை தமது மனைவியை காணும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வாழ்நாளில் என்னால் அவளை மீண்டும் பார்க்க முடியாமல் போகலாம். நான் கடைசியாக ஒருமுறை அவளைப் பார்க்க விரும்புகிறேன் என தமது பிள்ளைகளிடம் ஜாங் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவரின் ஒப்புதலுடன், வயதான ஜாங் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியின் அடுத்த படுக்கையில் வைக்கப்பட்டார்,

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளே உலகமெங்கும் பல மில்லியன் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில் அவர்களின் இறுதி பிரியாவிடை அது என்பதைக் காட்டுகிறது. நெஞ்சைத் தொடும் அந்த வீடியோவில் ஜாங் தமது மனைவியின் பெயரை கூப்பிடுகிறார்.

ஆனால் தமது கணவரையே பார்த்துக் கொண்டிருக்கும் வென், தொண்டையில் பொருத்தப்பட்டிருக்கும் குழாய் காரணமாக பேச முடியாமல் தவிக்கிறார்.

மருத்துவமனை தகவல்களின்படி, கடைசியாக ஒருமுறை மனைவியை பார்த்து பேசிய திருப்தியில் ஜாங் அதே நாளில் தனது மருத்துவமனை அறைக்குத் திரும்பியுள்ளார்.

ஆனால் அவரது மனைவி ஜனவரி 31 அதிகாலையில் காலமானார் என்பதை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் இதுவரை அவரிடம் வெளிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்