ஒரே நாளில் 86 பேர் உயிரிழப்பு: சீனாவில் வலுக்கட்டாயமாக வீடுகளில் இருந்து தூக்கிச் செல்லப்படும் நபர்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹான் நகரில் வைரஸ் ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை, பாதுகாப்பு உடை அணிந்த சில குண்டர்கள் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து தூக்கிச்செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலுமாக பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்க கூடிய கொரோனா வைரஸால், சனிக்கிழமை நிலவரப்படி 700 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் வெள்ளிக்கிழமை மட்டும் 86 பேர் இறந்துள்ளனர். உலகளவில் 34,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை "மக்கள் போர்" என்று கூறியுள்ள சீன துணை அதிபர் சன் சுன்லான், சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளையும், அவர்களுடன் சம்மந்தப்பட்ட நபர்களையும் தனிமைப்படுத்த, வுஹானுக்கு நேற்று உத்தரவிட்டார்.

இந்த போர்க்கால நடவடிக்கையில் அனைத்து கம்யூனிஸ்ட் அதிகாரிகளும் தீவிரமாக முன்னிலை வகிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக மூன்று பேர், பாதுகாப்பு உடை அணிந்த குண்டர்களால் வீடுகளில் இருந்து தூக்கிச்செல்லப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வுஹானில் படமாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த காட்சிகள், சீனாவின் துணைப் பிரதமரின் உத்தரவுக்கு பின்னர் வெளிவந்துள்ளன.

வுஹான் நகரில் சுமார் 14 மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ளனர். ஆனால் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்படுவார்கள் அல்லது அவர்கள் எங்கு வைக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.

தனிமைப்படுத்தப்பட வேண்டிய சாத்தியமான நபர்களை அடையாளம் காண, வுஹான் அதிகாரிகள் இப்போது வீடு வீடாக சென்று சுகாதார சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வுஹானில் நான்கு வகையான முறையில் கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும் என்று எம்.எஸ். சன் கோரினார்: உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள், சந்தேகத்திற்கிடமான வழக்குகள், நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers