300 பயணிகளுடன் புயலில் சிக்கிய விமானம்..! நடுவானில் கதறி அழுத பெண்: விமானி எடுத்த அதிரடி முடிவு

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஸ்பெயினிலிருந்து நெதர்லாந்து பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திலே தரையிறங்கியுள்ளது.

300 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் யூரோபா விமனாம் மாட்ரிட்டில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு நேற்று மதியம் 3 மணிக்குப் பிறகு புறப்பட்டுள்ளது.

சியரா புயலில் சிக்கிய விமானம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பலமுறை தரையிறங்க முயன்றபோது பயணிகள் தங்கள் உயிருக்கு அஞ்சி கத்திய திகிலூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

விமானம் ஐந்து முறை ஆம்ஸ்டர்டாமில் தரையிறங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானி இறுதியில் அவர்கள் புறப்பட்ட விமான நிலையத்திற்குத் திரும்ப முடிவு செய்தார், மீண்டும் மாட்ரிட்டில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

வெளியான வீடியோவில், சியரா புயலின் பலத்த காற்றில் சிக்கிய விமானம், நடுவானில் மேழும் கீழும் பயங்கரமாக குலுங்குகிறது. விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் உயிர் பயத்தில் அலறி பயங்கரமாக அழுகிறார்.

சம்பவம் குறித்து ஏர் யூரோபாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, மோசமான வானிலை காரணமாக மாட்ரிட்டில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானம் யுஎக்ஸ் 1093 ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியவில்லை, அதனால் மீண்டும் மாட்ரிட் திரும்பியது.

'பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர் மற்றும் மறுநாள் ஆம்ஸ்டர்டாம் பயணிப்பதற்கான மாற்று வழிகள் எங்கள் ஊழியர்களால் நிர்வகிக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.

சியாரா புயலால் மணிக்கு 93 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் ஐரோப்பா முழுவதும் விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர், பர்மிங்காம் மற்றும் பிராங்பேர்ட் உள்ளிட்ட விமான நிலையங்களில் பல விமானங்கள் ஆபத்தான முறையில் தரையிறக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி பீதியை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers