சீனா- வுஹானில் கொத்து கொத்தாக எரியூட்டப்படும் சடலங்கள்: அம்பலப்படுத்தும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹான் நகர வான்பரப்பில் அதிகமாக காணப்படும் சல்பர் டை ஆக்சைடின் அளவு என்பது, அங்கு சடலங்களை கொத்து கொத்தாக எரியூட்டுவதை காட்டுவதாக நிபுணர்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இது, கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அரசாங்கம் வெளியிடுவதை விட பல மடங்காக இருக்கலாம் என உறுதிப்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீப நாட்களில் வுஹான் வான்பரப்பில் சல்பர் டை ஆக்சைடின் அளவு மிகுந்து காணப்படுவது நிபுணர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வுஹான் மட்டுமின்றி, தற்போது அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை கண்டறிந்த சோங்கிங் நகரின் வான்பரப்பிலும் சல்பர் டை ஆக்சைடின் அளவு அதிகம் என்பதை உறுதி செய்துள்ளனர்.

உடல்கள் தகனம் செய்யப்படும்போதும் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படும்போதும் சல்பர் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மட்டுமின்றி கொரோனா பாதிப்பு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் இளம் பத்திரிகையாளர் ஒருவரும்,

புறநகர் பகுதிகளில் கொத்து கொத்தாக சடலங்களை எரியூட்டுவதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை மிக விரைவில் இறுதி சடங்குகளை மேற்கொண்டு மிக சாதாரணமாக தகனம் செய்ய வேண்டும் என சீன அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் வுஹானில் அதிக சல்பர் டை ஆக்சைடு அளவு காணப்படுவது அங்கு அதிக எண்ணிக்கையிலான தகனங்களும் நடந்தேறுவதை காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.

வுஹான் நகரில் தற்போது 11 மில்லியன் மக்கள் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது அங்கே அதிக அளவு சல்பர் டை ஆக்சைடு காணப்படுவதால்,

இது அவர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த வாயுவானது அதிக அளவு சுவாசிக்க நேர்ந்தால் ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி மற்றும் நுரையீரல் செயல்பாடு குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று மட்டும் 97 என பதிவாகியுள்ளது.

இது வுஹான் நகரில் கொரோனா பாதிப்பு தொடர்பில் தகவல் வெளினான நாளில் இருந்து மிக மோசமான நாள் என கூறப்படுகிறது.

இதுவரை கொரோனா வியாதிக்கு 910 பேர் மரணமடைந்துள்ளதாக சீனத்து அரசு தகவல் வெளியிட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,655 என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers