12 வயது சிறுமியிடம் அத்துமீறிய கொடூரன்கள்: பொதுவெளியில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சோமாலியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய வழக்கில், இரண்டு குற்றவாளிகளுக்குஇன்று பொதுவெளியில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சோமாலியாவை சேர்ந்த ஆயிஷா இலியாஸ் என்கிற 12 வயது சிறுமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஒரு சந்தையில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு மே மாதம் கைது 10 பேரை செய்தனர்.

சிறுமிக்கு நீதிகேட்டு நாடுமுழுவதும் போராட்டம் வெடித்ததோடு மட்டுமில்லாமல், உலகநாடுகளை சேர்ந்த பல இணையதளவாசிகள் #JusticeForAisha என்கிற ஹாஸ்டேக் மூலம் கருத்துப்பதிவிட்டு வந்தனர்.

அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட பின்னர், சோமாலியாவின் வடக்கு கடற்கரையில் உள்ள பொசாசோ நகர சதுக்கத்தில் அப்திபாதா அப்திரஹ்மான் வர்சமே மற்றும் அப்திசாகூர் முகமது டிஜ் ஆகியோருக்கு இன்று பொதுவெளியில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குற்றவாளியாகக் கருதப்பட்ட வார்சாமின் சகோதரர் அப்திசலம் அப்திரஹ்மானும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக அவரது வழக்கு மறு மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers