ஆண்டுக்கு ஆறு காதலர் தினம் கொண்டாடும் சீனா: கொரோனாவால் களையிழந்த சோகம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஆண்டுக்கு ஆறு காதலர் தினம் கொண்டாடும் சீனா, இம்முறை உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் மூழ்கியுள்ளதால் களையிழந்து காணப்படுகிறது.

வழக்கமாக இந்த நேரத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களால் களை கட்டும் ஷாங்காயில், உணவகங்கள் இம்முறை வெறிச்சோடிப்போயுள்ளன.

ஷாங்காயிலுள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரான Bill Hu, இம்முறை காதலர் தினக் கொண்டாட்டங்களுக்காக செய்யப்பட்டுள்ள முன்பதிவுகள் பூஜ்யம் என்றே சொல்லலாம் என்கிறார்.

கடந்த முறை தனது உணவகம் 170 வாடிக்கையாளர்களுடன் நிரம்பி வழிந்ததாக தெரிவிக்கும் Bill Hu, திடீரென தோன்றிய இந்த கொரோனா வைரஸால் எல்லாமே மாறிப்போனது என்கிறார்.

ஏற்கனவே காதலர் தினத்திற்காக முன்பதிவு செய்திருந்த பல வாடிக்கையாளர்களும், முன்பதிவை ரத்துசெய்துவிட்டதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார் Bill Hu.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்