சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் இளைஞர் அதில் இருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸால் சீனாவில் வெளிநாட்டினர் சிலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தனை சேர்ந்த இளைஞன் ஒருவன், கொரோனாவின் பிடியில் இருந்து தப்பி, சிகிச்சை மூலம் நன்றாக இருக்கிறார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சீனாவின் Guangzhou-வில் இருக்கும் மருத்துவனையில், பாகிஸ்தான் மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வுஹானில் படித்து வரும் இவர், கடந்த ஜனவரி மாதத்தின் இடையில் Guangzhou-க்கு வந்த போது, கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
A Pakistani student infected with novel #coronavirus was discharged from hospital after recovering in Guangzhou, China. #FightVirus pic.twitter.com/Fmqsp1zIy2
— China Xinhua News (@XHNews) February 13, 2020
இதையடுத்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவன் தற்போது முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து அந்த மாணவன் கூறுகையில், இங்கிருக்கும் பலர் பயத்திலே இருக்கின்றனர். ஏனெனில் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது, அது உயிரை கொள்ளும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் நான் அதை எல்லாம் பற்றி நினைக்கவேயில்லை. நீங்கள் உறுதியாக இருந்தால், உங்கள் மனம் உறுதியாக இருந்தால், நிச்சயம் போராட முடியும், அதை நீங்கள் எளிதாக ஜெயிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
முழுவதும் குணமடைந்த மாணவனுக்கு என்ன வகை உணவு கொடுக்கப்பட்டது என்று அங்கிருக்கும் செவிலியரிடம் கேட்டபோது, அவர் பிரட், முட்டை, காய்கள், சிக்கன் மற்றும் மாட்டுக்கறி கொடுத்ததாகவும், நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் Guangzhou-வில் ஐந்து வெளிநாட்டினருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டதாகவும், அவர்களும் மகிழ்ச்சியாக வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.