கொரோனாவை வென்று வீடு திரும்பிய 28 பேர்..! வைரஸை எதிர்க்க 6 பேர் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு

Report Print Basu in ஏனைய நாடுகள்
169Shares

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த 6 பேர் தங்களின் இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொவிட்-19 என பெயர் வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் இன்று ஹூபே மாகாணத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

பெப்ரவரி 13ம் திகதி வரை உலகளவில் 1,491 பேர் உயிரிழந்துள்ளனர். 65,246 பேருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பெப்ரவரி 13ம் திகதி மட்டும் 123 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 7,099 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் உலகிற்கு எச்சரிக்கை அழைப்பு விடுத்துள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் அயராது பாடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த 28 பேர் சீனாவின் ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

அவர்களில் ஆறு பேர் கொரோனா வைரஸ் எதிர்த்து மேலதிக ஆராய்ச்சிக்காக தங்களின் இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளனர். இது விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்