குறையாத காதல்! கொரோனாவை எதிர்த்து போராடும் 80 வயதை கடந்த தம்பதி! நெகிழ்ச்சி வீடியோ

Report Print Abisha in ஏனைய நாடுகள்
62Shares

சீனாவில், 87 வயதுள்ள கொரோனா பாதித்த தம்பதியினர் காதலுடன் நோயை எதிர்த்து போராடும் நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

தம்பதியினர் இருவரும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருவரும் அடுத்தடுத்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

87 வயதான கணவர் தன் மனைவிக்கு குடிப்பதற்காகப் பாட்டிலில் தண்ணீர், கொண்டு வந்து தருகிறார். மனைவிக்கு உணவும் அவரே ஊட்டி விடுகிறார். மனைவிக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் செய்கிறார்.

இது குறித்து வீடியோ சீன ஊடகமான “பீப்பில்ஸ் டெய்லி” தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வயதான தம்பதியர் விரைவில் குணைமடைய பிரார்த்திப்பதாக ஏராளமானோர் பதிவிட்டுள்ளனர்.

இது தான் உண்மையான காதல். இதை பார்க்க அழகாக இருக்கிறது. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என சிலர் பதிவிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்