கொரோனாவுக்கான சிகிச்சை... மொத்த செலவும் அரசே ஏற்கும்: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 என அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சைக்கான மொத்த செலவையும் அரசே ஏற்கும் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

குறித்த சலுகையானது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தாது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமே குறித்த சலுகை பொருந்தும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பில் சீனா அரசாங்கம் முதன் முறையாக அறிவித்தது.

இதுநாள் வரை கொரோனா பாதிப்புக்கு 1,383 பேர் மரணமடைந்துள்ளனர். மொத்தம் 64,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் 10,608 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்