சீனாவில் பாதுகாப்பு சாதனம் தட்டுப்பாடு! உயிரை பணயம் வைக்கும் மருத்துவர்கள்.. 6 பேர் பலி.. 1,716 பேருக்கு கொரோனா

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸால் 6 சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளனர் மற்றும் 1,700 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

நாட்டில் 1,716 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பெரும்பான்மையான 1,102 பேர் கொரோனா தோன்றிய நகரமான வுஹானில் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 400 பேர் ஹூபே மாகாணத்தின் பிற இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெங் கூறினார்.

வுஹானின் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தேவையை பூர்த்தி செய்ய சீன அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

வுஹானில் உள்ள பல மருத்துவர்கள் நோயாளிகளை சரியான முகமூடிகள் அல்லது பாதுகாப்பான உடை இல்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை தவறாமல் மாற்ற வேண்டும். ஆனால், தட்டுப்பாடு இருப்பதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதே உபகரணங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக சுகாதார ஊழியர்களுக்கு நோய் தொற்று சுலபமாக பரவுவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்