கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹானில் அடைத்து வைக்கப்பட்ட இடங்களிலிருந்து தப்புவோர், குற்றவாளிகளைப்போல கைது செய்யப்படுவதாக அங்கு தங்கியிருக்கும் பிரித்தானியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சுந்தர்லாந்தைச் சேர்ந்த கிறிஸ் ஹில் (38) சீனக் குடிமக்களான தனது மனைவி மற்றும் மகளுடன் வுஹானில் வாழ்ந்து வருகிறார்.
தாங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து தப்புவோரை, பொலிசார் கீழே தள்ளி கொடூரமான முறையில் கைது செய்வதாக தான் கேள்விப்பட்டதாக கிறிஸ் தெரிவித்துள்ளார்.
அடைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து தப்ப முயலும்போது சிக்குவோர், குற்றச்செயல் செய்ததாக கருதப்பட்டு கைது செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வீட்டுக்கு ஒருவர், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உணவுப்பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுடைய யாரும் வெளியேறவோ உள்ளே வரவோ இல்லை என்பதை உறுதி செய்வதற்காக வீடுகள் இருக்கும் பகுதிகளில் மருத்துவ ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனராம்.
எங்களில் சிலர், என்னைப்போல இங்கேயே இருந்துவிடுவது என முடிவு செய்தோம், ஆனால், எல்லாம் அவ்வளவுதான் போலிருக்கிறது, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த நிலை நீடிக்கும் என்பது தெரியவில்லை என்கிறார் கிறிஸ்.
தனது நான்கு வயது மகள் Renee Gaoவை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதாக தெரிவிக்கும் கிறிஸ், வெளியே மக்கள் உடல் நலமில்லாமல் இருக்கிறார்கள், ஆகவே வெளியே போவது பாதுகாப்பானதல்ல என்பதை அவள் புரிந்துகொள்கிறாள் என்கிறார்.

